கொழும்பில் இன்று 10 மணிநேர நீர்வெட்டு!

Date:

கொழும்பில் பல பகுதிகளுக்கு 10 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று (10) காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும்.

இதன்படி கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்ஸை, கோட்டே, கடுவெல மாநகர சபை, மஹரகம, பொரலஸ்கமுவ ஆகிய பகுதிகளுக்கும்,

கொலன்னாவ நகரசபை, கொட்டிகாவத்தை, முல்லேரியா, இரத்மலானை மற்றும் கட்டுபெத்த ஆகிய பகுதிகளுக்கும் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

ஒலிபெருக்கி பயன்பாட்டிற்கு புதிய கட்டுப்பாடுகள்!

பொது நிகழ்வுகளின் போது ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கான கால  காலவரையறைகள் குறித்து பொலிஸ்...

டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை அறிமுகம்

இலங்கையின் முதலாவது டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை மே முதலாம் திகதி...

வெசாக் தினத்தை முன்னிட்டு தன்சல் பதிவுகள் ஆரம்பம்!

வரவிருக்கும் வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நடத்தப்படவுள்ள அன்னதானங்கள்...