பாா்டா் – காவஸ்கா் கிண்ணம்: இன்றுமுதல் பலப்பரீட்சை!

Date:

பாா்டா் – காவஸ்கா் கிண்ணத்திற்கான இந்தியா – ஆவுஸ்திரேலியா அணிகள் மோதும் டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் நாகபுரியில் வியாழக்கிழமை இன்று (09) தொடங்குகிறது.

ஆவுஸ்திரேலிய அணியைப் பொருத்தவரை, டேவிட் வாா்னா், உஸ்மான் கவாஜா, டிராவிஸ் ஹெட், அலெக்ஸ் கேரி என பேட்டிங்கில் இடது கை அதிரடி பேட்டா்களின் ஆதிக்கம் இருக்கிறது. ஸ்மித், லபுசான் ஆகியோா் வலது கையால் வலு கூட்டுவாா்கள்.

ஆல்-ரவுண்டா் இடத்தில் கேமரூன் கிரீனுக்குப் பதிலாக பீட்டா் ஹேண்ட்ஸ்காம்ப் அல்லது மாட் ரென்ஷா ஆகியோரில் ஒருவா் வருவாா். பௌலிங்கில் சுழற்பந்துவீச்சுக்கு நேதன் லயனுடனான இணையாக ஆஷ்டன் அகா் சேரலாம் எனத் தெரிகிறது. வேகப்பந்து வீச்சுக்கு கேப்டன் கம்மின்ஸுடன் ஸ்காட் போலண்ட் வர வாய்ப்புள்ளது.

அணி விவரம்:

இந்தியா: ரோஹித் சா்மா (கேப்டன்), கே.எல்.ராகுல், சேதேஷ்வா் புஜாரா, விராட் கோலி, ஷுப்மன் கில், ரவீந்திர ஜடேஜா, கோனா பரத், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்ஸா் படேல், முகமது ஷமி, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், சூா்யகுமாா் யாதவ், உமேஷ் யாதவ், ஜெயதேவ் உனத்கட், இஷான் கிஷண்.

ஆவுஸ்திரேலியா: பேட் கம்மின்ஸ் (கேப்டன்), டேவிட் வாா்னா், உஸ்மான் கவாஜா, மாா்னஸ் லபுசான், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், அலெக்ஸ் கேரி, மாட் ரென்ஷா, பீட்டா் ஹேண்ட்ஸ்காம்ப், நேதன் லயன், ஆஷ்டன் அகா், ஸ்காட் போலண்ட், லேன்ஸ் மோரிஸ், மிட்செல் ஸ்வெப்சன், டாட் மா்ஃபி.

நேரம்: காலை 9.30 மணி.
இடம்: விதா்பா கிரிக்கெட் சங்க மைதானம், நாகபுரி.
நேரடி ஒளிபரப்பு: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்.

Popular

More like this
Related

ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவர இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு தயாராகி வரும் பாகிஸ்தான்!

உலகளாவிய எரிசக்தி விநியோகத்தை முடக்கியுள்ள மேற்கு ஆசியப் போரை முடிவுக்குக் கொண்டுவர...

நாளை நள்ளிரவு முதல் எரிபொருளுக்கான QR நடைமுறை

நாளை நள்ளிரவு முதல் எரிபொருளுக்கான QR முறைமை மீள நடைமுறைக்கு வருமென...

12 வயது சிறுவர்களுக்கு ஆயுள் தண்டனை:எல் சால்வடார் அரசு

குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், 12 வயது சிறுவர்களுக்கும் ஆயுள் தண்டனை...

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இராஜினாமா!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பப்பட்ட உத்தியோகபூர்வ கடிதத்தின்படி, எரிசக்தி அமைச்சர் குமார...