Friday, November 6, 2026

ஷார்ஜாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட ‘கைவாரு முத்து’ CIDயினரால் கைது!

1 min read · 2 reads

ஷார்ஜாவிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட திட்டமிட்ட குற்றக்குழுவின் உறுப்பினரான ‘கைவாரு முத்து’ என அழைக்கப்படும் மனோஜ் முத்துகுமார், குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அண்மையில் ஷார்ஜாவில் வைத்துக் கைது செய்யப்பட்ட அவர், பின்னர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

இதன்போது, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த சந்தர்ப்பத்தில் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அவரைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக மேல் மாகாண தெற்கு குற்ற விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.