அரச செலவினங்களைக் கட்டுப்படுத்த புதிய நடைமுறை!

Date:

அரச செலவினங்களைக் கட்டுப்படுத்துவதற்கும், புதிய அரசாங்க வருமானத்தை ஈட்டுவதற்கும் முறையான வழிமுறைகள் உடனடியாக அறிமுகப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

நாட்டை கட்டியெழுப்புவதற்கு நிதி ஒழுக்கம் இன்றியமையாதது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அரசாங்கம் செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாவிற்கும் அதிகபட்ச பெறுமதி பெறப்பட வேண்டும் எனவும், ஆனால் அது பெரும்பாலும் அரசாங்க செலவீனத்தில் இடம்பெறுவதில்லை எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுமக்களின் வருமானத்தை மறந்துவிடுவது மாத்திரமன்றி, எந்தவொரு பயனும் இல்லாத செயற்பாடுகளுக்காக பொதுமக்களின் பணத்தை வரம்பற்ற முறையில் செலவிடுவதே இந்த நாட்டில் பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுத்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

புதிய அரச வருமானத்தை உருவாக்குவதற்கான உத்திகளை கண்டறிய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை ஜனாதிபதி அலுவலகத்தில் கையளிக்கும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

Online விளையாட்டிற்கு அடிமையான மாணவன் தவறான முடிவெடுத்து தற்கொலை!

யாழ்ப்பாணத்தில் ஆன்லைன் விளையாட்டிற்கு (Online Games) அடிமையான 19 வயதுடைய பாடசாலை...

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று (30) பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்...

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...