ஹட்டன் – நுவரெலியா வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன், யுவதி படுகாயம்!

Date:

அதிக வேகத்துடன் பயணித்த மோட்டார் சைக்கிளொன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இளைஞர் ஒருவரும், யுவதியும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் ஹட்டன் மல்லியப்பு ஸ்டிதரன் தோட்டப் பகுதியிலேயே நேற்று மாலை 4 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

ஹட்டனில் இருந்து கொட்டகலை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த குறித்த மோட்டார் சைக்கிள், அதிக வேகத்தால் சறுக்கி சென்று, ‘கல்லில்’ மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த இருவரும் டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை அட்டன் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...