அமேசான் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 14 பேர் பலி!

Date:

பிரேசிலின் அமேசான் பகுதியில் சிறியரக விமானமொன்று விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்தப் பகுதியில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக இந்த விபத்து நேர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அமேசான்  மாநிலத்தின் தலைநகர் Manaus இல் இருந்து Barcelos வரை பயண நடவடிக்கையினை முன்னெடுத்திருந்த விமானம் தரையிறங்க முற்படுகையில் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் 12 பயணிகள் மற்றும் இரண்டு பணியாளர்கள் உயிரிழந்துள்ளதாக பிரேசில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், விமான விபத்துக்கான காரணங்கள் குறித்து விமானப்படை மற்றும் பொலிஸார் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், உயிரிழந்தவர்களை அடையாளம் காண்பதற்கான அவர்களின் சடலங்கள் Manaus நகருக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், புலனாய்வாளர்கள் மற்றும் அவசரகால அதிகாரிகள் விபத்து நேர்ந்த இடத்திற்கு பயணிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமேசான் பகுதியில் மீன்பிடிப்பதற்கான பருவகாலமாக இந்த மாதம் கருதப்படுவதன் காரணமாக, விபத்துக்குள்ளானவர்கள் அனைவரும் மீன்பிடிப்பதற்காக இந்தப் பகுதிக்கு பயணித்திருக்கலாமென சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Popular

More like this
Related

ஷானி அபேசேகர பிரதிப் பொலிஸ் மா அதிபராக (DIG) தரமுயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி...

புத்தளத்தில் ‘அத்தம’ தூய்மை வேலைத்திட்டம் ஆரம்பம்: அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு!

பண்டைய இலங்கையில் நிலவிய பரஸ்பர உதவி மற்றும் கூட்டுப் பொறுப்பை அடிப்படையாகக்...

இலங்கை ஜமாஅதே இஸ்லாமி தலைமையகத்திற்கு பங்களாதேஷ் IIUC பல்கலைக்கழக பிரதிநிதிகள் வருகை!

பங்களாதேஷின் சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் (IIUC) பொருளாளர் பேராசிரியர் கலாநிதி மஹ்பூபுர்...