அவிசாவளை துப்பாக்கி சூட்டில் இருவர் உயிரிழப்பு: மேலும் இருவர் படுகாயம்!

Date:

அவிசாவளை – ஹியல தல்துவ பகுதியில் நடாத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த துப்பாக்கி பிரயோகம் நேற்றிரவு 11.15 அளவில் நடாத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் மேலும் இருவர் காயமடைந்து, அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவிசாவளை – ஹியல தல்துவ பகுதியில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றை இலக்கு வைத்து இந்த துப்பாக்கி பிரயோகம் நடாத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கி பிரயோகம் நடாத்தப்படும் சந்தர்ப்பத்தில் முச்சக்கரவண்டியில் 4 பேர் பயணித்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

இவ்வாறு பயணித்த நால்வரில் இருவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்து அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த ஒருவரை இலக்கு வைத்து, இதற்கு முன்னரும் துப்பாக்கி பிரயோகம் நடாத்தப்பட்டிருந்ததாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இந்த துப்பாக்கி பிரயோகத்தை நடாத்திய சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

சம்பவ இடத்தில் 20திற்கும் மேற்பட்ட T56 ரக துப்பாக்கி ரவைகள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அவிசாவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

டிஜிட்டல் மயமாகும் அரச சேவைகள்: நிறுவனத் தலைவர்களுக்குப் புதிய வழிகாட்டல்கள் வெளியீடு!

இலங்கையில் எரிபொருள் நெருக்கடியைக் கருத்திற்கொண்டு, அரச சேவைகளை டிஜிட்டல் தொழில்நுட்பம் ஊடாகத்...

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவர் பதவியிலிருந்து விலகுகிறார் ஷம்மி சில்வா?

அரசாங்கத்தின் உயர்மட்டங்களில் அதிகரித்து வரும் அழுத்தம் மற்றும் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளுக்கு...

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் கைது!

காணி தகராறு ஒன்றில் பெண்களை துப்பாக்கியை கட்டி மிரட்டியமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர்...

ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு.

வடக்கு ஜப்பானில் திங்கட்கிழமை அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டது. ஜப்பானில் கடந்த ஒரு வாரத்திற்கு...