தவறு செய்யும் அதிகாரிகள் குறித்து “1905” க்கு உடனடியாக தகவல் தாருங்கள்!

Date:

மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு உட்பட்ட ஏனைய நிறுவனங்களில் பணிபுரியும் அதிகாரிகள் செய்யும் தவறுகள் தொடர்பில் 1905 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடு செய்ய முடியும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

மேற்படி தொலைபேசி இலக்கத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு உள்நாட்டலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த இலக்கத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை உடனடியாக ஆராய்ந்து உரிய தீர்மானங்களை எடுக்குமாறு உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த விசாரணை அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் விசாரணையை தாமதப்படுத்துவதன் மூலம் குற்றம்சாட்டப்பட்ட அதிகாரிகளுக்கும், முறைப்பாடு செய்யும் மக்களுக்கும் அநீதி இழைக்கப்படுவதைத் தடுப்பதற்காகவே இராஜாங்க அமைச்சர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

அதுமட்டுமின்றி பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட செயலகத்தில் உள்ள வெற்றிடங்களை உடனடியாக நிரப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, இதுவரை நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வுகளில் இருந்து உரிய பதவிகளுக்குத் தெரிவு செய்யப்பட்ட பணியாளர்கள், தற்போதுள்ள வெற்றிடங்களுக்கு உடனடியாக ஆட்சேர்ப்பு செய்யப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நிதியமைச்சு செயலாளரின் இல்லத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை விரட்டியத்த மக்கள்

அக்குரேகொடவில் உள்ள நிதியமைச்சின் செயலாளர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று காலை  ஆர்ப்பாட்டம்...

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச இஸ்லாமிய ஒற்றுமை மாநாடு: இலங்கை மலாயர் சமூகம் குறித்து டி.கே. அசூர் உரை!

மலேசியாவின் தெரெங்கானு மாநில அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட "5-வது சர்வதேச உம்மா...

பல்கலைக்கழக சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் திறப்பு!

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்...