வைத்தியசாலைகளில் 277 மருந்துகளுக்கு தட்டுப்பாடு!

Date:

தற்போது வைத்தியசாலைகளில் 277 மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவுதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் இந்தியா மற்றும் பங்களாதேஷிலிருந்து நேரடியாக மருந்துகளைக் கொள்வனவு செய்ய சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் இருநாட்டு சுகாதார அமைச்சர்களுடன் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கலந்துரையாடியுள்ளதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர், வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

பற்றாக்குறையை நிவர்த்திப்பதற்காக நாடுகளுக்கு இடையில் மருந்துகள் கொள்வனவு செய்யப்படவுள்ளன.

விலைமனு கோருவதில் ஏற்படும் தேவையற்ற கால தாமதத்தை குறைக்கும் வகையில் இந்த புதிய முறை அமுல்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர், வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ஒலிபெருக்கி பயன்பாட்டிற்கு புதிய கட்டுப்பாடுகள்!

பொது நிகழ்வுகளின் போது ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கான கால  காலவரையறைகள் குறித்து பொலிஸ்...

டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை அறிமுகம்

இலங்கையின் முதலாவது டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை மே முதலாம் திகதி...

வெசாக் தினத்தை முன்னிட்டு தன்சல் பதிவுகள் ஆரம்பம்!

வரவிருக்கும் வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நடத்தப்படவுள்ள அன்னதானங்கள்...