இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

Date:

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

யாழ்ப்பாணம் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் பல இடங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பாடு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

புத்தளம் தொடக்கம் கொழும்பு,காலி, மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 – 40 km வேகத்தில் தென் மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.

புத்தளம் தொடக்கம் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான அத்துடன் ஹம்பாந்தோட்டை தொடக்கம் பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 ‐ 55 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும்.

புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக ஹமபாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஒரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

Popular

More like this
Related

போர் நிறுத்தம்: அமெரிக்காவிடம் புதிய முன்மொழிவை வழங்கிய ஈரான்!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர்ச் சூழலைத் தணிக்கும் நோக்கில் ஈரான்...

வில்பத்து வழக்கு: ரிஷாத் பதியூதீனின் மேல்முறையீட்டு மனு விசாரணையிலிருந்து நீதிபதி விலகல்!

வில்பத்து சரணாலயத்திற்கு அருகிலுள்ள வனப் பகுதிகளை அழித்தது மற்றும் அதைத் தொடர்ந்த...

‘அமைதிக்கான நடைபயணம்’: நாளை கொழும்பில் சிறப்பு போக்குவரத்து திட்டம்

நாளை (28) கொழும்பில் நடைபெறவுள்ள ‘சமாதான நடைபவனி’ (Walk for Peace)...

டிஜிட்டல் மயமாகும் அரச சேவைகள்: நிறுவனத் தலைவர்களுக்குப் புதிய வழிகாட்டல்கள் வெளியீடு!

இலங்கையில் எரிபொருள் நெருக்கடியைக் கருத்திற்கொண்டு, அரச சேவைகளை டிஜிட்டல் தொழில்நுட்பம் ஊடாகத்...