இணையம் மூலமான வேலை வாய்ப்புகளில் மோசடி: மக்களே அவதானம்!

Date:

இணையம்  (Online) மூலம் வேலை வாய்ப்பு தருவதாக தெரிவித்து சுமார் 1 கோடி ரூபாய் மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மோசடி விசாரணை பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கரந்தெனிய, தெனகொட பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் 94 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாவை மோசடி செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணையின் மூலம் தகவல் வெளியாகியுள்ளது.

கைது செய்யப்பட்ட நபரின் 3 வங்கிக் கணக்குகளில் 72 இலட்சம் ரூபா பணம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் கல்கிசை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Popular

More like this
Related

உலக அமைதிக் குறியீட்டில் இலங்கை 14 இடங்கள் முன்னேற்றம்!

2026 உலகளாவிய அமைதிக் குறியீட்டில் இலங்கை கணிசமான முன்னேற்றத்தைப் பெற்றுள்ளதுடன், சமீபத்திய...

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...