ஊழலே இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு காரணம்; சர்வதேச நாணய நிதியம் அறிக்கை

Date:

இலங்கையின் சமீபத்திய பொருளாதார நெருக்கடியில் ஊழல் கணிசமான பங்கைக் கொண்டிருந்ததாக சர்வதேச நாணய நிதியம் கண்டறிந்துள்ளது.

“Sri Lanka Governance Diagnostic Assessment September 2023” என்ற தலைப்பிலான சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) புதிய அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு சிறிய உயரடுக்கினரின் கைகளில் அதிகப்படியான அதிகாரக் குவிப்பினால் நாட்டின் நிர்வாகச் சவால்கள் மோசமடைவதைக் கண்டறிய முடிந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிய ஊழலை விட பெரும் ஊழல் அதிகமாக இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஊழல் பெரும்பாலும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள், பொது நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு இடையிலான நெருங்கிய உறவுகளுடன் தொடர்புடையது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தகால ஏற்பாடுகள் மற்றும் நிறுவனங்களை வெறுமனே மீட்டெடுப்பதற்கான ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் முயற்சிகள், அடிப்படையான முறையான நிர்வாக சவால்கள் மற்றும் ஊழல் பிரச்சினைகளை எதிர்கொள்ள போதுமானதாக இருக்காது என்று சர்வதேச நாயண நிதியம் தனது அறிக்கையில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தெளிவாக வரையறுக்கப்பட்ட நோக்கங்கள், பொறுப்புகள், மேலாண்மை – மேற்பார்வை ஏற்பாடுகள் மற்றும் பொது அறிக்கையிடல் தேவைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஆலோசனையின் அடிப்படையில் 2025-2029க்கான தேசிய ஊழல் எதிர்ப்புத் திட்டத்தை இலங்கை உருவாக்க வேண்டும் என்று அறிக்கை பரிந்துரைத்தது.

அறிக்கையின் கண்டுபிடிப்புகள் முக்கியத்துவம் வாய்ந்தவை, ஏனெனில் இலங்கை தனது நிர்வாக சவால்கள் மற்றும் ஊழல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அவசர நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை அவை எடுத்துக்காட்டுகின்றன.

ஊழல் நாட்டின் பொருளாதாரத்தில் பேரழிவுகரமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, மேலும் குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்கள் இல்லாமல், எதிர்காலத்தில் இலங்கை மற்றொரு பொருளாதார நெருக்கடிக்குள் விழும் அபாயம் உள்ளது என்பது தெளிவாகிறது.

Popular

More like this
Related

ஒலிபெருக்கி பயன்பாட்டிற்கு புதிய கட்டுப்பாடுகள்!

பொது நிகழ்வுகளின் போது ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கான கால  காலவரையறைகள் குறித்து பொலிஸ்...

டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை அறிமுகம்

இலங்கையின் முதலாவது டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை மே முதலாம் திகதி...

வெசாக் தினத்தை முன்னிட்டு தன்சல் பதிவுகள் ஆரம்பம்!

வரவிருக்கும் வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நடத்தப்படவுள்ள அன்னதானங்கள்...