வாகன வருமான அனுமதிப்பத்திரம் தொடர்பில் வெளியான தகவல்!

Date:

வாகன வருமான அனுமதிப்பத்திரத்தை இன்று (07) முதல் வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ளலாம் என தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மேல் மாகாண மக்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து மாகாண மக்களும் இந்த வசதியை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்தார்.

எதிர்வரும் வருடம் மார்ச் மாதம் 31 ஆம் திகதி முதல் அனைத்து அரச நிறுவனங்களின் பணப்பரிவர்த்தனை நடவடிக்கைகளை இணையவழி முறையின் ஊடாக முன்னெடுக்கும் வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...

பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழைக்கான வாய்ப்பு

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது...

மாலைதீவு ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்!

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில் மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி...