கலாநிதி ஹஸன் மெளலானாவுக்கு ஸ்ரீ லங்கா ஷரிஆ கவுன்சில் தலைவர் வாழ்த்து !

Date:

ஐக்கிய நாடுகள் சமாதான தூதுவர்கள் பேரவையின் உறுப்பினராக அண்மையில் நியமிக்கப்பட்ட இலங்கை தேசிய ஐக்கியத்திற்கான சர்வமத கூட்டமைப்பின் முஸ்லிம் விவகார சமதலைவர் அல்ஹாஜ் அஷ்ஸெய்யித் கலாநிதி ஹஸன் மௌலானா அல்காதிரி அவர்களை,

2023 நவம்பர் 16ம் திகதி ஸ்ரீ லங்கா ஷரிஆ கவுன்சிலின் ஆயுட்கால தலைவரும், பஹ்ஜதுல் இப்ராஹீமியா அரபுக் கல்லூரியின் பணிப்பாளருமான அல்ஹாஜ் அஷ்ஷெய்க்ஹ் தேசமான்ய ஹஸ்புல்லாஹ் அப்துல் காதிர் பஹ்ஜி உத்தியோகப்பூர்வமாக சந்தித்து பொண்ணாடை போர்த்தி தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பஹன மீடியாவின் முகாமைத்துவப் பணிப்பாளர் அஷ்ஷெய்க்ஹ் அப்துல் முஜீப், ஜாமிஉல் கைராத் மஸ்ஜித் பிரதம இமாம் அல்ஹாஜ் அஷ்ஷெய்க்ஹ் ஏ.எச்.எம். மஹ்தி ரவ்லி மற்றும் நிவ்ஸ்நவ் மீடியாவின் பிரதம ஆசிரியர் பியாஸ் முஹம்மத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கலாநிதி ஹஸன் மௌலானா 20 வருடங்களுக்கும் மேலாக இலங்கையில் மதங்கள் மற்றும் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம், சகவாழ்வு மற்றும் சமாதானத்தை மேம்படுத்துவதற்கு சர்வமதத் தலைவர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...