மிகவும் நெருக்கடியான நாட்டையே நான் பொறுப்பேற்றுக்கொண்டேன். நாடு பொருளாதார ரீதியாக அனைத்து மட்டத்திலும் தோல்விகண்டிருந்தது. தற்போது பொருளாதாரத்தை மறுசீரமைப்பதற்கான வேலைத்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பின்வரும் விடயங்களை முன்வைத்தார்.
- பெருந்தோட்ட மக்களுக்கு முழுமையான காணி உரிமையை வழங்க திட்டமிட்டுள்ளோம். அதற்காக 4 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்படும்.
- முதியோர் கொடுப்பனவு 1000 ரூபாயில் இருந்து 3,000/- ரூபாயாக அதிகரிக்கப்படும்.
- கர்ப்பிணிகளுக்கான மாதாந்த கொடுப்பனவு அதிகரிப்பு 10ஆயிரம் வரை அதிகரிக்க எதிர்பார்க்கிறோம்.
- ஓய்வூதியர்களுக்கான வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு 2500 ரூபாய்வரை அதிகரிக்கப்படும்.
- பெருந்தோட்ட மக்களுக்கு முழுமையான காணி உரிமையை வழங்க திட்டமிட்டுள்ளோம். அதற்காக 4 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்படும்.
- அரச ஊழியர்களின் சம்பவத்தை நினைத்தவுடன் அதிகரிக்க முடியாது. சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் என்றால், வரியை அதிகரிக்க வேண்டும்.
- அரச வரியை அதிகரிப்பதிலும் எதிர்ப்புகள் உள்ளன. அரச கட்டமைப்பை வலுப்படுத்த வரி வருமானத்தை அதிகரிப்பது அவசியமாகும். 93 மில்லியன் அரச ஊழியர்களுக்கு தற்போது அவசியமாகும்.