அஹதியா பரீட்சைக்காக ஜும்ஆவுடைய நேரத்தை சுருக்கிக் கொள்ளுமாறு திணைக்களம் வேண்டுகோள்!

Date:

2023 ஆம் ஆண்டிற்கான அஹதிய்யாப் பாடசாலை இறுதிச் சான்றிதழ் பரீட்சை, 28 ஆம் 29 ஆம் திகதிகளில் நாடு பூராகவும் நடாத்தப்படவுள்ளதாக, இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதனடிப்படையில், 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தினமாக காணப்படுவதோடு, ஜும்ஆவுக்குப் பிறகும் பரீட்சை நடைபெறவுள்ளதால், அன்றைய தினம் குத்பாப் பிரசங்க நேரத்தைச் சுருக்கி, பிற்பகல் 1 மணிக்கு முன்னர் முடித்துக் கொள்ளுமாறு, அன்றைய தினம் ஜும்ஆப் பிரசங்கத்தை நிகழ்த்தும் கதீப்மார்களுக்கு அறிவித்தல் செய்யுமாறு, அனைத்து பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களிடமும், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் என். நிலோபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

– ஐ. ஏ. காதிர் கான்

Popular

More like this
Related

நீர்கொழும்பு பல்லன்சேன சிறையிலும் பதற்றமான சூழ்நிலை!

நீர்கொழும்பு, பல்லன்சேன சிறையிலும்  பதற்றமான சூழ்நிலை நிலவுவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த இரண்டு...

கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலி!

கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் நேற்று (07) இரவில் ஏற்பட்ட அமைதியின்மை...

இரத்தினபுரி -குருவிட்ட சிறைச்சாலை மோதல்- 2 பேர் உயிரிழப்பு – 4 கைதிகள் காயம்!

இரத்தினபுரி குருவிட்ட சிறைச்சாலைக்குள் இன்று காலை இடம்பெற்ற மோதலில் 2 பேர்...

நாட்டின் பல பகுதிகளில் 75 மி.மீ. இற்கும் அதிக மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மாகாணத்திலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில...