பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்!

Date:

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழையுடனான வானிலை நிலைமை இன்று (26) அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கிழக்கு மாகாணத்தில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்…

அனுராதபுரம் – அடிக்கடி மழை பெய்யும்.

மட்டக்களப்பு – அவ்வப்போது மழை பெய்யும்.

கொழும்பு – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்.

காலி – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்.

யாழ்ப்பாணம் – அடிக்கடி மழை பெய்யும்.

கண்டி    – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்.

நுவரெலியா – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்.

இரத்தினபுரி – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்.

திருகோணமலை – அவ்வப்போது மழை பெய்யும்.

மன்னார் – அடிக்கடி மழை பெய்யும்.

Popular

More like this
Related

இணையவழி வெறுப்புப் பிரசாரம்: இலங்கையில் சமூக ஊடகங்கள் மூலம் மீண்டும் புதுப்பிக்கப்படும் முஸ்லிம்களுக்கு எதிரான அலை!

"அறியாமையால் உருவாகும் தவறான புரிதல் பயத்தை வளர்க்கிறது, பயமே அமைதியின் மிகப்...

‘தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் சின்னங்களுக்கு அனுமதி இல்லை’; நல்லூரில் திலீபன் சிலை அகற்றப்பட்டது குறித்து அமைச்சர் நளிந்த.

யாழ்ப்பாணம், நல்லூர் திலீபன் நினைவிடத்தில் அமைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ...

ஞானசார தேரரின் சிறைத்தண்டனையை அமுல்படுத்த கோரிக்கை!

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு...