ஜனாதிபதியின் வரவு-செலவுத்திட்டம் மிகவும் கீழ்த்தரமானது: சஜித் குற்றச்சாட்டு

Date:

ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்டுள்ள 2024ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் மிகவும் கீழ்தரமான வரவு – செலவுத் திட்டம்   என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

2024ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட வாக்கெடுப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,

சாதாரண மக்களைப் புறக்கணித்து பெரும் செல்வந்தர்களை போஷிக்கும் வரவு – செலவுத் திட்டம் மூலம் சமூகத்தில் எந்தத் தரப்புக்கும் எந்த நன்மையும் கிட்டவில்லை.

சர்வதேச நாணய நிதியத்தின் மூலம் இன்னும் 8 தவணைகளைப் பெற வேண்டும். எனவே, இரண்டாம் தவணை கிடைத்தமைக்காக ஆரவாரப்பட்டு கொண்டாடக் கூடாது.

ஊழலை எதிர்க்கும், ஊழலை இல்லாதொழிக்கும் மற்றும் நல்லாட்சிக்காக தயாராகும் எந்தவொரு நபருக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் கதவுகள் திறந்தே இருக்கும் என்றார்.

Popular

More like this
Related

பெய்து வரும் கனமழையால் கிரகரி வாவியின் நீர்மட்டம் உயர்வு!

நுவரெலியா பகுதியில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக கிரகரி வாவியின் (Gregory...

அரச ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளுக்கு தீர்வு காண நடவடிக்கை – பிரதமர்!

அரச அதிகாரிகள் மற்றும் ஓய்வூதியர்களின் ஊதிய மற்றும் ஓய்வூதியக் கொள்கையை நிலையான...

குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !

களு கங்கையின் குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய...

டிரம்ப்பிற்கு பலத்த அடி! சிஎன்என் உள்ளிட்ட ஊடகங்களின் தடையை நீக்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சிஎன்என் (CNN), எம்.எஸ் நவ் (MS...