இஸ்ரேலிய கப்பல் கைப்பற்றப்பட்டது: ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வெளியிட்ட காணொளி

Date:

செங்கடல் பகுதியைக் கடக்கும் “இஸ்ரேலியக் கப்பலில்” ஒரு சிறப்புப் படை விமானத்தை தரையிறக்கி பணியாளர்களை கட்டுப்படுத்தும் காட்சிகளை  ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸுக்கு ஆதரவாக இருப்பதாக கூறிக்கொள்ளும் இரான் ஆதரவுப்பெற்ற ஹவுதி குழுவினர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் செங்கடல் வழியாக செல்லும் வெளிநாட்டு கப்பல்களை குறிவைத்து தாக்கி வருகின்றனர்.

ஹமாஸ் மற்றும் பலத்தீனர்களுக்கு தாம் ஆதரவளிப்பதை வெளிப்படுத்த, இஸ்ரேல் தொடர்புடைய கப்பல்களை மட்டுமே தாக்கி வருகிறோம் என ஹவுதி கூறியுள்ளது.

வணிக கப்பல்கள் மீதான தாக்குதல் சம்பவங்களுக்கு அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் அதன் நட்பு நாடுகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன.

இதேவேளை   ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் பகுதியைக் கடக்கும் கப்பல்கள் மீது நடத்திய தாக்குதல்களால் ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான வர்த்தகம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம்...

கொவிட் காலத்தில் தன்னார்வத் தொண்டு செய்த இளைஞருக்கு இலவச ஹஜ் வாய்ப்பு.

கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் பணிகளில் தன்னார்வமாக...

சவூதி அரேபியா சென்றடைந்த இலங்கையின் முதல் ஹஜ் யாத்ரீகர்கள் குழு: தூதுவர் அமீர் அஜ்வத் வரவேற்பு.

2026-ஆம் ஆண்டுக்கான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்ட 325...

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற விஜய்க்கு நமல் ராஜபக்ஷ வாழ்த்து!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றியை பதிவு செய்தமைக்காக நடிகரும்,...