சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கடன் தவணைக்காக முன்வைக்கப்பட்டுள்ள 75 புதிய நிபந்தனைகள்!

Date:

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கவுள்ள இரண்டாம் தவணை கடன் தொகைக்காக 75 புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது.

முன்னதாக வழங்கப்பட்ட முதலாம் தவணை கடன் தொகை தொடர்பில் முன்வைக்கப்பட்டிருந்த நிபந்தனைகளில் இலங்கை அரசாங்கம் இதுவரை பூர்த்தி செய்யாத 27 நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்கான காலக்கெடுவை புதுப்பிக்க அல்லது நீடிக்கவும் சர்வதேச நாணய நிதியம் இணக்கம் தெரிவித்துள்ளது.

நாணய நிதியத்தின் முதலாம் தவணைக் கடன் தொகை வழங்கப்பட்ட போது, இலங்கை அரசாங்கத்திடம் 73 நிபந்தனைகளை முன்வைத்து அவற்றை நிறைவேற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.

கடந்த ஆண்டின் நவம்பர் இறுதிக்குள் நிறைவேற்றப்பட வேண்டிய குறித்த 73 நிபந்தனைகளில் 60ஐ இலங்கை தாமதத்துடன் நிறைவேற்றியுள்ளது என்றும் நிறைவேற்றப்படாத 13 நிபந்தனைகளில் 8 நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், மீதியுள்ள 5 நிபந்தனைகள் கடுமையான நிபந்தனைகள் என்பதால் அவற்றை நிறைவேற்ற கால அவகாசம் தேவைப்படுவதாக அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

அதன்படி, 75 புதிய நிபந்தனைகளும், கடந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவேற்றப்பட வேண்டிய 27 நிபந்தனைகளும், நவம்பர் இறுதிக்குள் நிறைவேற்றப்பட வேண்டிய 8 நிபந்தனைகளும் ஒன்றிணைக்கப்பட்டு இரண்டாம் தவணைக் கடன் தொகைக்காக 110 நிபந்தனைகள் தற்போது விதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

Popular

More like this
Related

தவெகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு: காங்கிரஸ் விதித்த நிபந்தனை!

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க ஆதரவளித்துள்ள காங்கிரஸ், அக்கட்சிக்கு ஒரேவொரு...

விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

டெங்கு அபாயம் அதிகமுள்ள வலயங்களை இலக்காகக் கொண்டு இன்று (06) விசேட...

பல்கலைக்கழக பிரவேசத்திற்கான விண்ணப்பங்கள் மே 19 வரை நீடிப்பு

2025/2026 ஆம் கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக பிரவேசத்திற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு மே மாதம்...

மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த பொதுமக்களின் கருத்துக்கேட்பு இன்று

2026 ஆம் ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட விசேட மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த...