இன்றைய வானிலை முன்னறிவித்தல்!

Date:

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வட மாகாணம் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லி மீற்றர் அளவான பலத்த  மழை பெய்யக்கூடும்.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் சில இடங்களில் பனிமூட்டமான வானிலை நிலவும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்…  

அனுராதபுரம் – அவ்வப்போது மழை பெய்யும்.

மட்டக்களப்பு – அவ்வப்போது மழை பெய்யும்.

கொழும்பு – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

காலி – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

யாழ்ப்பாணம் – அடிக்கடி மழை பெய்யும்.

கண்டி – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

நுவரெலியா – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

இரத்தினபுரி – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

திருகோணமலை – அவ்வப்போது மழை பெய்யும்.

மன்னார் – அடிக்கடி மழை பெய்யும்.

Popular

More like this
Related

போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை: சட்டங்களை கடுமையாக்க இலங்கை அரசு பரிசீலனை!

நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த, அதுதொடர்பான குற்றங்களுக்கு மரண...

குழந்தைகளுக்கென அறிமுகமாகும் போசனைத் திட்டம்

கோவிட்-19 நோய்த்தொற்று காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினால் வீழ்ச்சியடைந்த ஊட்டச்சத்து நிலையை...

லங்கா மெட்ரோ பேருந்து சேவை விரிவாக்கத்துக்கு 1 பில்லியன் ரூபாவுக்கும் அதிக தொகை ஒதுக்கீடு!

லங்கா மெட்ரோ டிரான்சிட் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் பொதுப் போக்குவரத்துச் செயல்பாடுகளை...