ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு இலவச மதிய உணவு!
அரச பாடசாலைகளில் தரம் 1 முதல் 5 வரையான சகல ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்
கல்வி அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் மார்ச் முதல் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.