இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு!

Date:

நாட்டில் கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (04) பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய, சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான வானிலை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Popular

More like this
Related

ஒக்டோபர், நவம்பரில் அதிக மழைவீழ்ச்சி: வெள்ள அபாயத்திற்குத் தயாராகுமாறு வானிலை மையம் எச்சரிக்கை!

இலங்கையில் எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வழக்கத்தை விட அதிக...

மூத்த ஊடகவியலாளர் என். எம். அமீன் அவர்களுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கி கௌரவம்!

இலங்கை ஊடகத்துறையிலும் தமிழ் ஊடகக் பரப்பிலும் பல தசாப்தங்களாகத் தனது பங்களிப்பை...

பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையில் வெடி விபத்து; விசாரணைக்காக இரு பொலிஸ் குழுக்கள்!

பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையின் சமையலறை வளாகத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம்...

இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் பிரபல கலைஞர் நூர்ஜஹான் மர்சூக் அவர்கள் காலமானார்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (SLBC) முஸ்லிம் சேவையில் பல தசாப்தங்களாகத் தனது...