இம்ரான் கான் கட்சியின் (பி.டி.ஐ) தலைவர் பதவி நீக்கம்…!

Date:

இம்ரான் கான் கட்சியின் (பிடிஐ) தலைவர் பொறுப்பிலிருந்து, பாரிஸ்டர் கோஹர் அலி கான் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் பாராளுமன்றத்துக்கு கடந்த 8ஆம் திகதி தோ்தல் நடைபெற்றது. அதனுடன் சோ்த்து பஞ்சாப், சிந்து, பலூசிஸ்தான், கைபா் பக்துன்கவா ஆகிய மாகாணப் பேரவைகளுக்கும் தோ்தல் நடைபெற்ற நிலையில், தேர்தலில் மோசமான செயல்பாடு காரணமாக, இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியின் (பிடிஐ) தலைவர் பொறுப்பிலிருந்து, பாரிஸ்டர் கோஹர் அலி கான் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அக்கட்சியின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க உள்கட்சித் தேர்தல் மார்ச் 3ஆம் திகதி நடைபெறும் என்றும், கட்சியின் புதிய தலைவராக 71 வயதான பாரிஸ்டர் அலி ஸாபர் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Popular

More like this
Related

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம்...

கொவிட் காலத்தில் தன்னார்வத் தொண்டு செய்த இளைஞருக்கு இலவச ஹஜ் வாய்ப்பு.

கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் பணிகளில் தன்னார்வமாக...

சவூதி அரேபியா சென்றடைந்த இலங்கையின் முதல் ஹஜ் யாத்ரீகர்கள் குழு: தூதுவர் அமீர் அஜ்வத் வரவேற்பு.

2026-ஆம் ஆண்டுக்கான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்ட 325...

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற விஜய்க்கு நமல் ராஜபக்ஷ வாழ்த்து!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றியை பதிவு செய்தமைக்காக நடிகரும்,...