குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம்: மடகாஸ்கர் அரசு சட்டம்

Date:

மடகாஸ்கரில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஆண்டு 600 சிறுமிகள்/குழந்தைகள் பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்துவருவதால் குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகளுக்கு தண்டனையை அதிகரிக்கவும் மடகாஸ்கர் அரசு  அதிரடி முடிவெடுத்துள்ளது.

குற்றவாளிகளுக்கு ரசாயன ரீதியிலும், அறுவை சிகிச்சை மூலமாகவும் ஆண்மை நீக்கம் செய்ய வகை செய்யும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள சட்டம்  மடகாஸ்கர்  நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள சட்டம் அந்நாட்டின் உயர் அரசியலமைப்பு நீதிமன்றத்தின் அங்கீகாரத்தை பெற்று பின்னர் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட உள்ளது. ஜனாதிபதி ஒப்புதல் அளித்த உடன் சட்டம் அமலுக்கு வர உள்ளது.

இந்த சட்டத்தின்படி, 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண்மை நீக்கப்படும்.

10 முதல் 13 வயதிற்கு உள்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு அறுவை சிகிச்சை மூலமோ அல்லது ரசாயன முறையிலோ ஆண்மை நீக்கப்படும்.

14 முதல் 17 வயதிற்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு இரசாயன முறையில் ஆண்மை நீக்கப்படும்.

ஆண்மை நீக்கம் மட்டுமின்றி பாலியல் வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்படும் வகையில் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

மடகாஸ்கர் அரசு கொண்டுவந்துள்ள சட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

வெற்றிகரமாக நடைபெற்ற தேசிய மஸ்ஜித் நம்பிக்கையாளர்கள் வழிகாட்டல் நிகழ்சித்திட்டம்

இலங்கை வக்ப் சபை மற்றும் முஸ்லிம் சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம்...

மக்கா புனித ஹரம் ஷரீஃப் பள்ளிவாசலின் முஅத்தின் ஷேக் இப்ராஹிம் அல்-மதனி காலமானார்!

மக்கா புனித மஸ்ஜிதுல் ஹராம் பள்ளிவாசலின் அதிகாரப்பூர்வ முஅத்தினான (தொழுகைக்கான அழைப்ப...

சீரற்ற வானிலை காரணமாக 38 பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை!

நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இன்று (21) 38...

2026 க.பொ.த. உயர்தரப் பரீட்சை; செயல்முறை பரீட்சை அட்டவணை அறிவிப்பு!

026 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் செயல்முறைப் பரீட்சைகள் இந்த...