சாதாரண தர பரீட்சைக்கான பாடங்களை குறைக்க கல்வி அமைச்சு தீர்மானம் !

Date:

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான பாடங்களின் எண்ணிக்கையை ஏழாகக் குறைக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.

எஞ்சிய மூன்று பாடங்களுக்கு உள்நாட்டில் மாணவர்களுக்கு வழங்கக்கூடிய தொழில் மற்றும் சுற்றுச்சூழல் அறிவை மதிப்பீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என  தெரிவித்துள்ளார்.

எந்தவொரு மாணவரும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையவும், க.பொ.த உயர்தரப் பரீட்சையில் தமக்கு விருப்பமான மற்றும் திறமையான பாடப் பிரிவுகளில் தொழில்சார் பயிற்சிகளை பெற்றுக் கொள்வதற்கும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இந்த வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய 3,370,000 மாணவர்களில் 50,000 மாணவர்களுக்கு ஆங்கிலம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் வழிகாட்டல் பயிற்சிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்துள்ளார்.

நாளை (மார்ச் 05) முதல் நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள 300 நிலையங்களில் இந்த பயிற்சி நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

மாலைதீவு ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்!

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில் மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி...

நிதியமைச்சு செயலாளரின் இல்லத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை விரட்டியத்த மக்கள்

அக்குரேகொடவில் உள்ள நிதியமைச்சின் செயலாளர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று காலை  ஆர்ப்பாட்டம்...

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச இஸ்லாமிய ஒற்றுமை மாநாடு: இலங்கை மலாயர் சமூகம் குறித்து டி.கே. அசூர் உரை!

மலேசியாவின் தெரெங்கானு மாநில அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட "5-வது சர்வதேச உம்மா...