நீதிபதி அப்துல் கபூர் தலைமையில் ஒற்றுமைப் பேரவையின் யாப்பு வரையும் பணிகள்!

Date:

இலங்கையில் இயங்கும் இஸ்லாமிய நிறுவனங்களுக்கிடையே பரஸ்பர அறிமுகத்தையும் புரிந்துணர்வையும் சமூக நலன் சார்ந்த விடயங்களில் இணைந்து செயற்படுவதற்கான சூழலையும் ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட இஸ்லாமிய ஐக்கியப் பேரவைக்கான யாப்பு வரையும் பணிக்காக முன்னாள் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி எம்எம் அப்துல் கபூர் தலைமையில் ஏழு பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

கடந்த வியாழனன்று (22) கொழும்பு பெரிய பள்ளிவாசலில் 30 அமைப்புக்கள் அங்கம் வகிக்கின்ற இஸ்லாமிய ஐக்கியப் பேரவையின் தலைவர்கள் மற்றும் பிரதிநிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் இந்தக் குழு நியமிக்கப்பட்டது.

பேரவையின் நடப்புத் தலைவர் அஸ்-ஸெய்யித் ஸாலிம் ரிபாய் மௌலானா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் யாப்பு தயாரிக்கும் குழுவுக்கான பல்வேறு ஆலோசனைகளையும் கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்கள் பலரும் முன்வைத்தனர்.

முன்னாள் நீதிபதி அப்துல் கபூர் தலைமையிலான யாப்பு தயாரிக்கும் குழுவில் சட்டத்தரணி ட்டீ.கே.அஸூர், சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன், சட்டத்தரணி எஸ்எம்என்எஸ்ஏ மர்ஸூம் மௌலானா, சிரேஷ்ட ஆய்வாளர் எம் அஜ்வதீன், இறைவரித் திணைக்களத்தின் முன்னாள் பிரதி ஆணையாளர் நாயகம் அஷ். என்எம்எம் மிப்லி, இலங்கை மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவர் Dr.ருவைஸ் ஹனிபா ஆகியோர் அடங்குகின்றனர். ஞாயிறன்று (25) யாப்பு தயாரிக்கும் குழுவினருக்கும் இஸ்லாமிய ஐக்கியப் பேரவையின் ஸ்தாபகர்களுக்கும் இடையில் முன்னாள் நீதிபதி அப்துல் கபூர் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து யாப்பு தயாரிக்கும் பணிகளை குழுவினர் ஆரம்பித்துள்ளனர்.

Popular

More like this
Related

தரம் 6 பாடசாலை அனுமதி: இரண்டாம் சுற்று மேன்முறையீடுகள் நாளை முதல் ஆரம்பம்!

2025 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பெறுபேறுகளின் அடிப்படையில், 2026...

கன்னி மரியாள் சிலை வாயில் சிகரெட் வைத்து அவமதித்த இஸ்ரேல் வீரர்:

லெபனான் - இஸ்ரேல் போர் நிறுத்தம் எட்டப்பட்டாலும் லெபனான் மீதான தாக்குதல்களை...

ஃபிரைட் ரைஸ், பிரியாணி உட்பட பல உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு!

இன்று (07) நள்ளிரவு முதல் ஃபிரைட் ரைஸ், பிரியாணி மற்றும் நாசி கோரெங் ஆகியவற்றின்...

வாடகை மற்றும் குத்தகை வீட்டு உரிமையாளர்களுக்கு பொலிஸாரின் முக்கிய அறிவித்தல்!

வீடுகள் மற்றும் கட்டிடங்களை வாடகை அல்லது குத்தகைக்கு எடுத்து, அவற்றைப் பயன்படுத்தி...