இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

Date:

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய  பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை காணப்படும்.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை இன்று (09) அவதானம் செலுத்த வேண்டிய நிலைக்கு உயரும் என வளிமண்டலவியல் திணைக்களம் நேற்று (08) அறிவித்திருந்தது.

இதன்படி, வடமேற்கு, தெற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மொனராகலை, இரத்தினபுரி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் சில இடங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பம் கவனத்திற்குரிய மட்டத்தில் தொடரும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. .

போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, முடிந்தவரை நிழலான இடங்களில் ஓய்வெடுப்பது, கடுமையான வெளிப்புறச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் பிரபல கலைஞர் நூர்ஜஹான் மர்சூக் அவர்கள் காலமானார்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (SLBC) முஸ்லிம் சேவையில் பல தசாப்தங்களாகத் தனது...

சாதாரண தர மீள் மதிப்பீட்டு முடிவுகள் வெளியீடு

2025 (2026) ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையின் மீள்...

நவம்பர் மாதம் முதல் TIN இலக்கத்தை முன்வைப்பது கட்டாயம்

எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் குறிப்பிட்ட பணிகளை மேற்கொள்ளும்...

நாட்டின் பல இடங்களில் இன்று மழைக்கு சாத்தியம்!

நாட்டின் பல இடங்களில் இன்றும் (26) பல இடங்களில் மழையுடன் கூடிய...