மைத்திரியின் சர்ச்சைக்குரிய கருத்து: சட்டமா அதிபர் திணைக்களத்தினால் விசாரணை

Date:

 ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்து தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த விடயம் தொடர்பில் இதுவரை கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் மைத்திரிபால சிறிசேனவிடம் நேற்று(25) வாக்குமூலம் பெறப்பட்டிருந்தது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அவர் வௌியிட்ட கருத்துகளின் அடிப்படையில் இந்த வாக்குமூலம் பெறப்பட்டிருந்தது.

அவர் வழங்கிய வாக்குமூலத்தின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் இதற்காக நியமிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று வழங்கிய வாக்குமூலம் இதுவரை தமக்கு கிடைக்கவில்லை எனவும் இன்று கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் சட்டமா அதிபர் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அவர் வழங்கிய வாக்குமூலம் மற்றும் அது தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களை ஆராய்ந்து நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்டது யார் என்பது தொடர்பில் தான் அறிந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 22 ஆம் திகதி தெரிவித்திருந்தார்.

Popular

More like this
Related

தரம் 6 பாடசாலை அனுமதி: இரண்டாம் சுற்று மேன்முறையீடுகள் நாளை முதல் ஆரம்பம்!

2025 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பெறுபேறுகளின் அடிப்படையில், 2026...

கன்னி மரியாள் சிலை வாயில் சிகரெட் வைத்து அவமதித்த இஸ்ரேல் வீரர்:

லெபனான் - இஸ்ரேல் போர் நிறுத்தம் எட்டப்பட்டாலும் லெபனான் மீதான தாக்குதல்களை...

ஃபிரைட் ரைஸ், பிரியாணி உட்பட பல உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு!

இன்று (07) நள்ளிரவு முதல் ஃபிரைட் ரைஸ், பிரியாணி மற்றும் நாசி கோரெங் ஆகியவற்றின்...

வாடகை மற்றும் குத்தகை வீட்டு உரிமையாளர்களுக்கு பொலிஸாரின் முக்கிய அறிவித்தல்!

வீடுகள் மற்றும் கட்டிடங்களை வாடகை அல்லது குத்தகைக்கு எடுத்து, அவற்றைப் பயன்படுத்தி...