வடமாகாண பிரதம செயலாளராக இளங்கோவன்

Date:

வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான புதிய பிரதம  செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இதற்கான நியமனக் கடிதங்களை ஜனாதிபதியின்
செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஜனாதிபதி செயலகத்தில் வைத்து  நேற்று (12)
கையளித்தார்.

அதற்கமைய வடக்கு மாகாண பிரதமச் செயலாளராக எல். இளங்கோவன் மற்றும் வடமேல் மாகாண பிரதமச் செயலாளராக தீபிகா கே. குணரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை நிர்வாகச் சேவையின் தலைசிறந்த அதிகாரியான எல்.இளங்கோவன் வடக்கு மாகாண அமைச்சுக்கள் பலவற்றின் செயலாளர் பதவி வகித்ததுடன், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளராகும் பணியாற்றியுள்ளார்.

எல்.இளங்கோவன் வடக்கு மாகாண பிரதமச் செயலாளராக நியமனம் பெறும் வரை,
வடக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதியின் மேலதிக செயலாளராக
பணியாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இலங்கையில் காற்று மாசுபாட்டால் ஆண்டுக்கு 7,000 பேர் மரணம்!

வளிமண்டலக் காற்று மாசுபாடு காரணமாக இலங்கையில் ஆண்டுதோறும் சுமார் 7,000 மரணங்கள்...

ஜனாதிபதி தலைமையில் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட கலந்துரையாடல்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் 2027 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட...

பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவான மாணவர்களுக்கான பதிவு ஆரம்பம்!

2025 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், சாதாரண...

மிச்சிகன் செனட் தேர்தல்: யூத பின்புலம் கொண்ட ஹேலி ஸ்டீவன்ஸை வீழ்த்தி அப்துல் எல்-சயீத் வரலாற்று வெற்றி!

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் நடைபெற்ற மாநில செனட் சபைக்கான (US Senate)...