இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

Date:

இன்றையதினம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

கிழக்கு, ஊவா, மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மி.மீ. இற்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், தென் மாகாணங்களில் காலை வேளையில் ஆங்காங்கே மழை பெய்யும் வாய்ப்புக் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

பாடசாலைகள் இன்று ஆரம்பம்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்த நிலையில், முதலாம்...

ஹெலிக்கொப்டர் விபத்தில் சிக்கிய ஈரான் ஜானதிபதி இப்ராஹிம் ரைசி மரணம்: ஹெலிக்கொப்டரில் பயணித்த எல்லோரும் பலி!

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்துள்ளதாக அந்நாட்டு...

ஈரான் ஜனாதிபதி உயிருடன் இருப்பதற்கான அறிகுறி இல்லை’: அரச ஊடகம் தகவல்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் ஹெலிகாப்டர் விபத்தில் இருந்து உயிர் மீண்டு...

ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி தேடும் துருக்கி!

விபத்தில் சிக்கிய ஈரான் ஜனாதிபதியின் ஹெலிக்கொப்டரின் சிதைவு என கருதப்படுவதிலிருந்து வெளிவரும்...