ஈரான் ஜனாதிபதி பயணித்த ஹெலிக்கொப்டர் விபத்து!

Date:

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஸி பயணம் செய்வதற்கு பயன்படுத்தும்  ஹெலிக்கொப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளதாக  சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

ஈரான் ஜனாதிபதி பயணம் செய்த ஹெலிக்கொப்டர் தொலைதூர பகுதியொன்றில் அவசரமாக தரையிறங்கியுள்ளது என ஈரானின் அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஸி  இன்று காலை அண்டை நாடான அசர்பைஜானுக்கு சென்றிருந்தார். அசர்பைஜான் – ஈரான் இடையே பாயும் அரஸ் ஆற்றின் குறுக்கே புதிதாக அணை கட்டப்பட்டுள்ளது.

அந்த அணை திறப்பு விழாவிற்காக அவர் இன்று அசர்பைஜான் சென்று அந்நாட்டு பயணத்தை முடித்துவிட்டு  ஹெலிகாப்டர் மூலம் ஈரான் திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது, அவர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. அசர்பைஜானை ஒட்டியுள்ள ஈரானின் ஜல்பா நகரில்  விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரான் ஜனாதிபதி  பயணித்த ஹெலிகாப்டர் மலைப்பகுதியில் விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த பகுதியில் கடுமையான மழை மற்றும் பனி மூட்டம் இருப்பதால் மீட்புப்பணிகள் தாமதமாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹெலிகாப்டரில் பயணித்த ஈரான் ஜனாதிபதி நிலை குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.

ஹெலிக்கொப்டர் அவசரமாக தரையிறங்கிய பகுதிக்கு செல்வது கடினமாக உள்ளது என ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம்...

கொவிட் காலத்தில் தன்னார்வத் தொண்டு செய்த இளைஞருக்கு இலவச ஹஜ் வாய்ப்பு.

கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் பணிகளில் தன்னார்வமாக...

சவூதி அரேபியா சென்றடைந்த இலங்கையின் முதல் ஹஜ் யாத்ரீகர்கள் குழு: தூதுவர் அமீர் அஜ்வத் வரவேற்பு.

2026-ஆம் ஆண்டுக்கான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்ட 325...

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற விஜய்க்கு நமல் ராஜபக்ஷ வாழ்த்து!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றியை பதிவு செய்தமைக்காக நடிகரும்,...