பரீட்சை நிலையத்திலிருந்து காணாமல் போன சிறுமிகள் கண்டுபிடிக்கப்பட்டனர்

Date:

க.பொ.த (சா/த) பரீட்சை முடிந்து செவ்வாய்க்கிழமை (14) நாவலப்பிட்டியில் காணாமல் போன இரண்டு மாணவிகளும் கடுவெலயில் உள்ள அவர்களது உறவினர்கள்  வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் குறித்த சிறுமிகள் கொழும்பு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாணவிகள் இருவரும் கடந்த 15ஆம் திகதி இரவு கடுவளையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியுள்ளனர்.

கினிகத்ஹேனவில் உள்ள பரீட்சை நிலையத்தில் நடைபெற்ற க.பொ.த சாதாரண தர பரீட்சை முடிந்து இம்மாணவிகள் வீடு திரும்பாத நிலையில் பெற்றோர்களால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சிறைச்சாலைகளில் போதைப்பொருள் பிரச்சினை: அமைச்சர் விஜேபால

சிறைச்சாலைகளில் நேற்றிரவு முதல் ஏற்பட்டுள்ள மோதல் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொதுமக்கள்...

நீர்கொழும்பு பல்லன்சேன சிறையிலும் பதற்றமான சூழ்நிலை!

நீர்கொழும்பு, பல்லன்சேன சிறையிலும்  பதற்றமான சூழ்நிலை நிலவுவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த இரண்டு...

கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலி!

கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் நேற்று (07) இரவில் ஏற்பட்ட அமைதியின்மை...

இரத்தினபுரி -குருவிட்ட சிறைச்சாலை மோதல்- 2 பேர் உயிரிழப்பு – 4 கைதிகள் காயம்!

இரத்தினபுரி குருவிட்ட சிறைச்சாலைக்குள் இன்று காலை இடம்பெற்ற மோதலில் 2 பேர்...