விஜயதாசவுக்கு எதிரான தடை உத்தரவு கோரிக்கை நிராகரிப்பு

Date:

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக விஜயதாச ராஜபக்சவையும் பதில் செயலாளராக கீர்த்தி உடவத்தவையும் நியமிப்பது தொடர்பான தீர்மானத்திற்கமைய அந்த கட்சியின் அமைப்புக்கள் மற்றும் அதிகாரிகள் செயற்படுவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு முன்வைத்த கோரிக்கையை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (16) நிராகரித்துள்ளது.

இந்த முறைப்பாட்டைத் திருத்தவும், உரிய தடை உத்தரவுக்கான உண்மைகளை உறுதிப்படுத்தவும் வாதிக்கு அவகாசம் உள்ளதாக நீதியரசர் சந்துன் விதான தெரிவித்தார்.

மேலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்கவினால் இந்த முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Popular

More like this
Related

“பாபர் மசூதி இடிப்பு பற்றி கருத்து தெரிவிப்பது தேசவிரோதமல்ல”: மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

அயோத்தியில் உள்ள பாபர் மசூதி இடிக்கப்பட்டிருக்கக் கூடாது என்ற கருத்தை வெளிப்படுத்துவதை...

ஹட்டன் கல்வி வலய பாடசாலைகள் நாளைமுதல் வழமைக்கு!

மோசமான வானிலை காரணமாக மூடப்பட்டிருந்த ஹட்டன் கல்வி மண்டலத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளும்...

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கைது!

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் கரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (05) லஞ்ச...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை

2026 ஆம் ஆண்டின் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனைத்து விதமான...