கிராம சேவையாளர்களுக்கான நியமனம் நாளை

Date:

கிராம சேவையாளர் தரம் 3 இற்கான புதிய ஆட்சேர்ப்பு பட்டியல் நேற்று உள்நாட்டலுவல்கள் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.கிராம சேவையாளர் தரம் 3 இற்கான, பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் காலாண்டு பயிற்சிக்குத் தகுதி பெற்ற 1,942 விண்ணப்பதாரர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

உள்நாட்டலுவல்கள் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.moha.gov.lk இல் அந்த பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, கிராம உத்தியோகத்தர்களுக்கான புதிய நியமனப் பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ள அனைவருக்கும் நாளை காலை 10.30 மணிக்கு அலரிமாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்தவின் பங்குபற்றுதலுடன் இந்த  நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

 

Popular

More like this
Related

இலங்கை – பாலஸ்தீனம் இடையிலான நட்புறுதியை மேலும் வலுப்படுத்த இருநாடுகள் உறுதி!

இலங்கை மற்றும் பாலஸ்தீனம் இடையிலான நீண்டகால இருதரப்பு நட்புறவை மேலும் வலுப்படுத்தும்...

22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதம் செப்டம்பர் 24, 25 இல்!

22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதிமன்ற அமைப்புகள் (திருத்த) சட்டமூலம்...

ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு இரத்து!

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார...

துமிந்த திஸாநாயக்கவுக்கு குற்றப்பத்திரிகை தாக்கல்!

தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர்...