அரச ஓய்வூதியம் பெறாதவர்களுக்கு வழங்கப்படவுள்ள கொடுப்பனவு குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு

Date:

இலங்கையில் அரச ஓய்வூதியம் பெறாதவர்களுக்கு, பங்களிப்பு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை சமூக பாதுகாப்பு சபை (Sri Lanka Social Security Board) ஆரம்பித்துள்ளது.

இதேவேளை ஒருவர் தமது சபையில் அங்கத்தவரானதன் பின்னர் அவருக்கான ஓய்வூதியம் தயாரிக்கப்படும் என அந்த சபையின் பொது முகாமையாளர் கே.ஏ.எஸ்.பிரசன்ன களுஆரச்சி (K.S. Prasanna Kalu Arachchi) தெரிவித்துள்ளார்.

அதன்படி, எதிர்வரும் காலங்களில் அரச ஓய்வூதியம் பெறாதவர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியம் வழங்கும் நோக்கில் இந்தத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இது தொடர்பான மேலதிக தகவல்களை 011-2886 088 அல்லது 076-095-4002 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும் எனவும் சமூக பாதுகாப்பு சபையின் பொது முகாமையாளர் அறிவித்துள்ளார்.

இதேவேளை அரச ஓய்வூதியம் பெறுபவர்களின் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படவுள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தமையும்  குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம்...

கொவிட் காலத்தில் தன்னார்வத் தொண்டு செய்த இளைஞருக்கு இலவச ஹஜ் வாய்ப்பு.

கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் பணிகளில் தன்னார்வமாக...

சவூதி அரேபியா சென்றடைந்த இலங்கையின் முதல் ஹஜ் யாத்ரீகர்கள் குழு: தூதுவர் அமீர் அஜ்வத் வரவேற்பு.

2026-ஆம் ஆண்டுக்கான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்ட 325...

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற விஜய்க்கு நமல் ராஜபக்ஷ வாழ்த்து!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றியை பதிவு செய்தமைக்காக நடிகரும்,...