பொதுத் தேர்தலை முன்னிட்டு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் விசேட வேலைத்திட்டம்

Date:

தேர்தல் காலத்தில் ஏற்படக்கூடிய அவசரநிலைகளை நிவர்த்தி செய்வதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைபடுத்தப்பட்டுள்ளதாக  அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம், தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம், முப்படைகள் மற்றும்  இலங்கை காவல்துறையினரும் இதற்காக இணைந்து செயற்படவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி  தெரிவித்துள்ளார்.

மேலும், எந்த ஒரு பேரிடர் சூழ்நிலையையும் கையாள்வதற்கான சிறப்பு மையம் இன்று (12) முதல் 16ஆம் திகதி வரை 5 நாட்களுக்கு செயல்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது தயார் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

60 ஆண்டுகளாக நீடித்த கூட்டணி: திமுகவிலிருந்து இருந்து விலகியது ஐயுஎம்எல்!

தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின்...

க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள்; 2.25 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி!

கடந்த 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை...

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும்...