நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை..!

Date:

தென்மேற்கு பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெற்று வருகிறது. இதனால், மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, புத்தளம், நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

வடமத்திய மாகாணத்தில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு (30-40) கி.மீ வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

Popular

More like this
Related

75 ஆண்டுகளில் நாடு எதிர்கொள்ளும் மிக மோசமான எல்நினோ

இவ்வாண்டின் இறுதியில் வரலாற்றில் மிக மோசமான எல்நினோ (El Niño) நிலவழியை...

இலங்கையில் டெங்கு மரணங்கள் 71 ஆக உயர்வு!

இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 93,000...

‘கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய சகா ‘வனாதே சத்து’ டுபாயில் கைது!

குற்றச் செயல்களில் ஈடுபடும் முக்கிய குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘கஞ்சிபானி இம்ரான்’...

சர்வதேச திருக்குர்ஆன் மனனப் போட்டியில் இலங்கை மாணவர் முஹம்மத் இம்தாத் உலகளவில் 3-ஆம் இடம் பிடித்து சாதனை!

சவூதி அரேபியாவின் மக்கா நகரில் உள்ள புனித ஹரம் ஷரீஃப் பள்ளிவாசலில்...