18 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்

Date:

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க 18 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்துள்ளார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, குறித்த நியமனக் கடிதங்களை இன்று (03)  ஜனாதிபதி அலுவலகத்தில் புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு வழங்கினார்.

விசேட தர நீதித்துறை அதிகாரிகள் 17 பேரும் மற்றும் சட்ட மாஅதிபர் திணைக்களத்தில் பணியாற்றும் சிரேஷ்ட அரசதரப்பு சட்டத்தரணி ஒருவரும் இவ்வாறு மேல் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 111 ஆவது அரசியலமைப்பின் (2) ஆவது உப பிரிவின்படி ஜனாதிபதியினால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டன.

நீதிபதிகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளின் பட்டியல் – வகித்த பதவிகள்

1. எஸ்.எஸ்.கே. விதான – மாவட்ட நீதிபதி
2. ஏ.எம்.ஐ.எஸ். அத்தநாயக்க – மாவட்ட நீதிபதி
3. ஏ.எம்.எம். ரியால் – மாவட்ட நீதிபதி
4. டீ.பீ. முதுங்கொடுவ, – மாவட்ட நீதிபதி
5. எஸ்.பி.எச்.எம்.எஸ். ஹேரத் – மேலதிக மாவட்ட நீதிபதி
6. ஜே. கஜனிதீபாலன் – மாவட்ட நீதிபதி
7. டி.எம்.டி.சி. பண்டார நீதிச் சேவை ஆணைக்குழுவின் சிரேஷ்ட மேலதிக செயலாளர்
8. எச்.எம்.பி.ஆர். விஜேரத்ன – மேலதிக மாவட்ட நீதிபதி
9. டி.எம்.ஏ. செனவிரத்ன – மேலதிக மாவட்ட நீதிபதி
10. ஏ.ஏ. ஆனந்தராஜா நீதவான்
11. ஜி.என். பெரேரா – மாவட்ட நீதிபதி
12. ஏ. ஜுடேசன் – மாவட்ட நீதிபதி
13. திருமதி.டபிள்யூ.கே.டி.எஸ். வீரதுங்க – மாவட்ட நீதிபதி
14. ஆர்.பி.எம்.டி.ஆர். வெலிகொடபிடிய – மாவட்ட நீதிபதி
15. செல்வி கே.டி.என்.வி. லங்காபுர, நீதவான்
16. டி.எம்.ஆர்.டி. திசாநாயக்க – மாவட்ட நீதிபதி
17. எம்.ஐ.எம். ரிஸ்வி – மாவட்ட நீதிபதி
18. திருமதி. ஏ. ஜெயலக்ஷி டி சில்வா – சிரேஷ்ட அரசதரப்பு சட்டத்தரணி

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் கலந்துகொண்டார்.

 

Popular

More like this
Related

ஜனாதிபதி மாளிகை குத்தகைக்கு: அமைச்சரவை அனுமதி

அரசுக்கு சொந்தமான மாளிகைகள், வீடுகள் மற்றும் ஜனாதிபதி மாளிகைகளை பொருளாதார ரீதியாக...

இலங்கை தமிழ் இளைஞருக்கு சவூதியில் சிறைத்தண்டனை விவகாரம்: விரிசல்களை வளரவிடாது இன நல்லிணக்கத்தை பாதுகாப்பது முக்கியம்

சவூதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த இலங்கையைச் சேர்ந்த அனோஜன் என்ற இளைஞருக்கு,...

மெக்குவாரி வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி ஷெமாரா விக்ரமநாயக்க ஓய்வு

ஆஸ்திரேலியாவின் முன்னணி நிதிச் சேவை நிறுவனமான 'மெக்குவாரி குரூப்' (Macquarie Group)...

ராஷித் அல்-கன்னூசியின் உடல்நிலை குறித்து சர்வதேச முஸ்லிம் உலமாக்கள் ஒன்றியம் கவலை: துனிசிய அரசிற்கு கோரிக்கை!

துனிசியாவின் மூத்த அரசியல் தலைவரும், பிரபல இஸ்லாமிய அறிஞருமான ஷேக் ராஷித்...