இடைவிடாது தாக்குதல்கள்: காசா நகர மையப் பகுதியை நோக்கி முன்னேறும் இஸ்ரேலிய டாங்கிகள்

Date:

இஸ்ரேலிய டாங்கிகள் காசா நகர மையப் பகுதியை நோக்கி முன்னேற ஆரம்பித்திருப்பதோடு அங்கிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறி வரும் சூழலில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 65,000 ஐ தாண்டியுள்ளது.

சர்வதேச அளவில் கடும் கண்டனங்களுக்கு மத்தியில் காசா நகரில் தரை வழி படை நடவடிக்கையை ஆரம்பித்திருக்கும் இஸ்ரேலிய படை நகரில் இடைவிடாது தாக்குதல்களை நடத்தி வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

பல டஜன் இஸ்ரேலிய டாங்கிகள் மற்றும் இராணுவ வாகனங்கள் காசாவின் பிரதான குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்ததாக உள்ளூர் குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

டாங்கிகள், புல்டோசர்கள் மற்றும் கவச வாகனங்கள் காசா நகரின் வடக்கே உள்ள ஷெய்க் ரத்வான் குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த முன்னேற்றத்தை பாதுகாக்கும் வகையில் இஸ்ரேலிய படை பீரங்கி குண்டுகள் மற்றும் புகை குண்டுகளை வீசி அடர்ந்த புகைக்கு மத்தியில் முன்னேற ஆரம்பித்துள்ளன.

ஷெய்க் ரத்வான் பகுதியில் போருக்கு முன்னர் ஆயிரக்கணக்கான பலஸ்தீனர்கள் வசித்து வந்தனர். இந்த பகுதி காசா நகரில் அதிக சனநெரிசல் மிக்க பகுதிகளில் ஒன்றாக கருதப்பட்டு வந்தது.

காசா நகரை ஹமாஸ் அமைப்பின் கடைசி கோட்டை என இஸ்ரேல் வர்ணித்துள்ளது. இங்குள்ள 3,000 வரையிலான ஹமாஸ் போராளிகளை தோற்கடிப்பது மற்றும் பணயக்கைதிகளை விடுப்பதற்கே படை நடவடிக்கையை ஆரம்பித்திருப்பதாக இஸ்ரேல் கூறுகிறது. சிறுவர்களை பாதுகாப்போம் மற்றும் ஒக்ஸ்பாம் உட்பட 20 இற்கும் அதிகமான பிரதான உதவி நிறுவனங்கள், ‘காசாவில் நிலவும் மனிதாபிமானமற்ற நிலை மனசாட்சிக்கு விரோதமானது’ என்று எச்சரித்துள்ளன.

Popular

More like this
Related

ஜனாதிபதி நிதியம்- ஜனசக்தி அறக்கட்டளை இடையே விசேட புரிந்துணர்வு ஒப்பந்தம்!

18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்குக் கிடைக்கும் சுகாதார வசதிகளை விரிவுபடுத்தும் நோக்கில் ஜனாதிபதி...

வித்யா கொலை வழக்கு; குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு

2015-ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாடசாலை மாணவி சிவலோகநாதன்...

சிறுவர்களின் டிஜிட்டல் பாதுகாப்பை உறுதி செய்யப் புதிய கொள்கை!

சிறுவர்கள் டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் சமூக ஊடகங்களை மேற்பார்வையின்றிப் பயன்படுத்துவதால் ஏற்படும்...

தவெகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு: காங்கிரஸ் விதித்த நிபந்தனை!

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க ஆதரவளித்துள்ள காங்கிரஸ், அக்கட்சிக்கு ஒரேவொரு...