இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு?

Date:

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்று (6) முதல் அறிவிக்கப்பட உள்ள நிலையில் நோபல் பரிசுக்கான  தெரிவு  முறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு எதிர்வரும் 10ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது. இதற்கு மொத்தம் 338 பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் தலைவர்கள் அமெரிக்க  ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்பை பரிந்துரைத்ததாக கூறியுள்ளனர். ஆனால் ஜனவரி 31 என்ற காலக்கெடுவுக்கு பிறகு அவர்கள் பரிந்துரை செய்துள்ளதால் நடப்பு ஆண்டுக்கான விருதுக்கு ட்ரம்ப்பின் பெயர் பரீசீலிக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதேவேளை ட்ரம்ப் தற்போது சர்வதேச உறவுகளை சீர்குலைத்து வருகிறார் என குற்றம்சாட்டும் நோபல் விருது குழு ட்ரம்ப்  தனது கொள்கைகளை மாற்றிக்கொண்டால் மட்டுமே நோபல்பரிசு பெறுவதற்கு  வாய்ப்பு ஏற்படும் என கூறியுள்ளது.

இந்த முறை நோபல் பரிசுக்கு மனித உரிமை அமைப்புகள், பத்திரிகையாளர்கள், ஐ.நா போன்ற அமைப்புகளை குழுவினர் முன்னிலைப்படுத்தி இருக்கலாம் என கூறப்படும் நிலையில் ஆச்சரியமிக்க அறிவிப்புகளையும் வெளியிட வாய்ப்புள்ளதாக ஒரு சாரார் கூறுகின்றனர்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...