யாழ். செல்வா கலையரங்கில் நடைபெற்ற வடக்கு முஸ்லிம் இடம்பெயர்ந்தோர் கூட்டம்.

Date:

வடக்கில் இருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்ட 35ஆவது வருடத்தை நினைவுகூர்ந்து  31 ஆம் திகதி  யாழ்ப்பாணம் செல்வா கலையரங்கில் வடக்கு முஸ்லிம்  இடம்பெயர்ந்தோர் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பேசிய பலர், முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களின் ஒற்றுமை, ஒன்றிணைந்த வாழ்வின் அவசியம் குறித்து வலியுறுத்தினர்.

மேலும், இனி இப்படிப்பட்ட இடம்பெயர்வுகள் மீண்டும் நடைபெறக்கூடாது என்பதையும் உணர்ச்சி பூர்வமாக தெரிவித்தனர்.

கூட்டத்தில் வடக்கு பகுதி சமூகத் தலைவர்கள், மத தலைவர்கள் மற்றும் இடம்பெயர்ந்தோர் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கடந்த 35 வருடங்களாக வடக்கு முஸ்லிம் மக்களின் விவகாரங்கள் போதுமான அளவிற்கு கருத்தில் எடுத்துக் கொள்ளப்படவோ அல்லது அவர்களுக்கான போதுமான தீர்வுகள் கிடைத்து விட்டதாகவோ வடக்கு முஸ்லிம்கள் இன்று வரை கருதவில்லை.

Popular

More like this
Related

இன்று கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

“சமாதான நடைபயணத்தின்” இறுதி நாளையொட்டி இன்று (28) கொழும்பில் விசேட போக்குவரத்து...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பல இடங்களில் இன்று பி.ப. 1.00 மணிக்குப்...

நேற்று காலமான பேராசிரியர் அப்துல் மலிக் அவர்களின் ஜனாஸா இஸ்லாமாபாத்தில் நல்லடக்கம்.

இலங்கை மருதமுனையை பிறப்பிடமாகக் கொண்ட ஜாமியா நளீமியாவின் பட்டதாரியும், பாகிஸ்தான் சர்வதேச...

போர் நிறுத்தம்: அமெரிக்காவிடம் புதிய முன்மொழிவை வழங்கிய ஈரான்!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர்ச் சூழலைத் தணிக்கும் நோக்கில் ஈரான்...