சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடும் பணி மீண்டும் ஆரம்பம்!

Date:

சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடும் பணி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் அச்சிடும் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டதாகவும், அன்றாடம் சுமார் 6,000 அனுமதிப் பத்திரங்களை அச்சிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் கூறியுள்ளது.

பற்றாக்குறையின் விளைவாக அண்மைய காலகட்டத்தில் கிட்டத்தட்ட 350,000 சாரதி அனுமதிப் பத்திரங்கள் குவிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

புதிய அட்டை இருப்புக்கள் இப்போது கிடைத்துள்ளதால், அச்சிடும் பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

 

மேலும் தேங்கி நிற்கும் அனுமதிப் பத்திரங்களை விரைவாக அச்சிடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வேரஹெர பிரதான அலுவலகத்திற்கு மேலதிகமாக, தற்போது ஹம்பாந்தோட்டை மற்றும் அனுராதபுரம் மாவட்ட அலுவலகங்களிலும் அச்சிடும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

குருணாகலிலும் விரைவில் அச்சிடும் பணிகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், விண்ணப்பித்த 14 நாட்களுக்குள் புதிய சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்குவதற்கு திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...