தன் அறிவாலும் பணிவாலும் மக்களின் உள்ளங்களை கவர்ந்து மார்க்கப் பணியாற்றிய அஷ்ஷெய்க் முப்தி யமீன் மறைவு.

Date:

அஷ்ஷெய்க் முப்தி யமீன் அவர்கள் புத்தளம் சமூகத்திற்கும் குறிப்பாக கல்விச் சமூகத்திற்கும் பெரும்பங்களிப்பு செய்த ஒருவராவார்.

ஓலைக் குடிசையாக ஆரம்பிக்கப்பட்ட அஷ்ரபிய்யா அரபுக் கல்லூரியின் ஆரம்ப காலத் தூண்களில் ஒருவராகத் திகழ்ந்தவர்.

அங்கு தனது கல்விப் பயணத்தைத் தொடங்கிய அவர்,’அதிக முயற்சி உடையவர்,’ ‘ஒழுக்கம், தக்வா (இறையச்சம்) மற்றும் உயரிய பண்பாடுகளால் தன்னை அலங்கரித்தார். எப்போதும் பிறரை மதிக்கின்ற தன்மை கொண்ட அஷ்ஷெய்க் முப்தி யமீன் அவர்கள் அடக்கமும் பணிவும் கொண்ட பண்பாளர்.

அஷ்ரபிய்யா அரபுக்கல்லூரியின் முதலாவது ஷரீயாத்துறை மாணவராகவும் அறிவைத்தேடும் ஆர்வத்தில் இந்தியா வரை சென்று தனத மேற்படிப்பை சிறப்பாக பூர்த்தி செய்வராகவும் அஷ்ரபிய்யாவின் முதலாவது ‘இப்தா’ (மார்க்கத் தீர்ப்பு) துறையை வெற்றிகரமாக முடித்த சிறந்த ஆலிமாகவும் அவர் திகழ்ந்தார்.

புத்தளம் வாழ் மக்களின் மனங்களில் நீங்கா இடம்பெற்று மார்க்கப் பணியிலும் அறிவைப் பரப்புவதிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டு நூற்றுக்கணக்கான உள்ளங்களை அல்லாஹ்வின் பக்கம் திருப்பிய அறிஞர் முப்தி யமீன் அவர்களை அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக.

சுவன வாழ்க்கையை அவருடைய தாயகமாக ஆக்குவானாக. அவர்களை இழந்து துன்பப்படும் அவரது குடும்பித்தினரும் நெருக்கமானவர்களும் இந்த இழப்பை தாங்கிக்கொள்ளக்கூடிய சக்தியை அல்லாஹ் அவர்களுக்கு வழங்குவனாக!

Popular

More like this
Related

போர் நிறுத்தம்: அமெரிக்காவிடம் புதிய முன்மொழிவை வழங்கிய ஈரான்!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர்ச் சூழலைத் தணிக்கும் நோக்கில் ஈரான்...

வில்பத்து வழக்கு: ரிஷாத் பதியூதீனின் மேல்முறையீட்டு மனு விசாரணையிலிருந்து நீதிபதி விலகல்!

வில்பத்து சரணாலயத்திற்கு அருகிலுள்ள வனப் பகுதிகளை அழித்தது மற்றும் அதைத் தொடர்ந்த...

‘அமைதிக்கான நடைபயணம்’: நாளை கொழும்பில் சிறப்பு போக்குவரத்து திட்டம்

நாளை (28) கொழும்பில் நடைபெறவுள்ள ‘சமாதான நடைபவனி’ (Walk for Peace)...

டிஜிட்டல் மயமாகும் அரச சேவைகள்: நிறுவனத் தலைவர்களுக்குப் புதிய வழிகாட்டல்கள் வெளியீடு!

இலங்கையில் எரிபொருள் நெருக்கடியைக் கருத்திற்கொண்டு, அரச சேவைகளை டிஜிட்டல் தொழில்நுட்பம் ஊடாகத்...