தலாவ பகுதியில் தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து: 06 பேர் உயிரிழப்பு!
அநுராதபுரம், தலாவ, ஜயகங்க சந்திப் பகுதியில் தனியார் பஸ் ஒன்று கவிழ்ந்து இன்று (10) விபத்துக்குள்ளாகியுள்ளது.
பஸ் விபத்தில் இதுவரை 06 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்கள் தலாவ வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தலாவப் பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களில் A/L பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களும் அடங்குவதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
காயமடைந்தவர்கள் தற்போது தம்புத்தேகம மற்றும் தலாவ வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கருத்துக்கள் 1 comment
DataDan ·
The structure of this piece is excellent.