பாடசாலை நேர நீடிப்பு குறித்து கல்வி அமைச்சின் செயலாளர் விளக்கம்!

Date:

அடுத்த ஆண்டு ஜனவரி முதல் பாடசாலை நேரத்தைப் பிற்பகல் 2 மணி வரை நீடிப்பது உள்ளிட்ட கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து ஆசிரியர் தொழிற்சங்கங்களுடன் போதுமான ஆலோசனை நடத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த கல்வி அமைச்சு, தொழிற்சங்கங்களுக்குத் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கப் பல வாய்ப்புகள் வழங்கப்பட்டதாகவும், ஆனால் சில சங்கங்கள் விவாதங்களில் ஈடுபடாமல் புறக்கணித்தன என்றும் தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சு செயலாளர் நளக்க கலுவெவ கூறுகையில்,

அனைத்துச் சங்கங்களையும் பலமுறை அழைத்தும் சில பிரதிநிதிகள் விவாதத்தில் பங்கேற்காமல் விலகிச் சென்றதாகவும், இது தங்கள் தரப்பில் உள்ள குறைபாடு அல்ல என்றும் திட்டவட்டமாகக் கூறினார்.

மேலும், 200,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுடன் தனித்தனியாக விவாதிப்பது சாத்தியமில்லை என்ற போதிலும், மாகாண மற்றும் வலய மட்டங்களில் குறிப்பிடத்தக்க விகிதத்தில் ஆசிரியர்களுடன் இந்தச் சீர்திருத்தங்கள் குறித்து ஏற்கனவே ஆலோசிக்கப்பட்டதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...