தேசமாக ஒன்றிணைந்து, தைரியத்துடனும் ஒற்றுமையுடனும் சவால்களை எதிர்கொள்வோம்: ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தி.

Date:

ஜனாதிபதி அநுர குமாரவின்  கிறிஸ்மஸ் வாழ்த்துச் செய்தி..

உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவ பக்தர்கள் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை பக்தியுடன் கொண்டாடும் உன்னதமான கிறிஸ்மஸ் திருநாள் இன்றைய தினம் (25) உதயமாகியுள்ளது.

இலங்கையர்களாகிய நாம், இம்முறை கிறிஸ்மஸ் பண்டிகையை ஒரு தேசமாக மிகவும் வேதனைமிக்க இயற்கை அனர்த்தத்திற்கு முகங்கொடுத்து, அதிலிருந்து மீண்டு எழுவதற்கு உறுதியுடன் முயற்சிக்கும் ஒரு தீர்மானமிக்க தருணத்தில் கொண்டாடுகிறோம் என்பதை நாம் அறிவோம்.

அன்பு, அமைதி, மகிழ்ச்சி, பகிர்தல் மற்றும் தியாகம் ஆகியவையே கிறிஸ்மஸ் பண்டிகையின் உண்மையான அர்த்தங்களாகும். பாதிக்கப்பட்டவர்களுக்கு சகோதரத்துவ உணர்வுடன் உதவுவதும், ஒட்டுமொத்த மனிதகுலத்தின் விமோசனத்திற்காக அர்ப்பணிப்புடன் செயல்படுவதும் இதில் முதன்மையானது.

கிறிஸ்தவ மதத்தைப் போலவே அனைத்து மதங்களும் போதிப்பது என்னவென்றால், அண்டை வீட்டார் ஆபத்தில் இருக்கும்போது அவர்களைக் கைவிடாமல் சகோதரத்துவத்துடன் அணைத்துக்கொள்ளும் உன்னதமான மனிதாபிமான பண்பாகும். அந்த அசைக்க முடியாத உறுதியை கடந்த கால அனர்த்தங்களின் போது இந்நாட்டு மக்கள் மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளனர்.

தமது சகோதர மக்களுக்காக, தாங்கள் ஒருபோதும் செல்வோம் என்று எதிர்பார்க்காத பாதைகளில் அத்தியாவசியப் பொருட்களைச் சுமந்து கொண்டு மக்கள் சென்றனர்.

அண்டை வீட்டாரை நேசிக்கும், அமைதி மற்றும் ஒற்றுமை நிலவும், தியாகம் மற்றும் சகவாழ்வு கொண்ட ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்ப அழைப்பு விடுக்கும் உன்னத நத்தாரின் உண்மையான அர்த்தத்தை அவர்கள் இதன் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர் என்று நான் நம்புகிறேன்.

இருளை விரட்ட வேண்டுமானால், ஒளியின் பிரகாசத்தைப் பரப்ப வேண்டும்.

பெத்லகேமின் ஏழ்மையான மாட்டுத் தொழுவத்தில் பிறந்து, மனித சமூகத்தைப் பாவங்களிலிருந்து விடுவிப்பதற்காக கல்வாரி மலை உச்சியில் சிலுவையில் அறையப்பட்டுத் தன்னைத் தியாகம் செய்த இயேசு கிறிஸ்து, தனது மன உறுதி, நம்பிக்கை மற்றும் ஞானத்தின் மகிமையால் மரணத்தை வென்று உயிர்த்தெழுந்தார் என்று கிறிஸ்தவ தர்மத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யதார்த்தமான வேதனைமிக்க உண்மைகளை எதிர்கொண்டு, சவால்களை வென்று ஒரு நாடாக ஒன்றிணைந்து எழுவோம் என்று உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றேன்.

உதயமாகியுள்ள இந்த உன்னதமான நத்தர் திருநாள் அமைதி, மகிழ்ச்சி நிறைந்ததாகவும், கருணையை முன்னிறுத்தி மனிதாபிமானத்தை ஒளிர்விக்கச் செய்யும் சுப நத்தர் தினமாகவும் அமையட்டும் எனப் பிரார்த்திக்கின்றேன்.

Popular

More like this
Related

அடுத்து வரும் 36 மணித்தியாலங்களுக்கு மழை நீடிக்கும் வாய்ப்பு!

அடுத்து வரும் 36 மணித்தியாலங்களில் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி,...

பயங்கரவாதத்திலிருந்து அரசினைப் பாதுகாக்கும் வரைவுச் சட்டமூலம்’ உழைக்கும் மக்களின் போராட்டங்களை ஒடுக்குவதற்கே – முன்னிலை சோசலிசக் கட்சி சாடல்!

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ளபயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் Protection of the State...

வேளாண் தொழில் நுட்பம் மற்றும் நிலையான உணவு உற்பத்தியில் இலங்கை – கட்டார் கூட்டுறவு விரிவாக்கம்

வேளாண் தொழில்நுட்பம் (Agri-technology), காலநிலைக்கேற்ற விவசாயம் மற்றும் நிலையான உணவு உற்பத்தி...

சவூதி மன்னரிடம் அனோஜனுக்கு அரச மன்னிப்பு வழங்குமாறு இலங்கை முஸ்லிம் எம்.பிக்கள் கூட்டு வேண்டுகோள்.

சவூதி அரேபியாவில் சிறைத்தண்டனையையும் அபராதத்தையும் எதிர்கொண்டுள்ள இலங்கையரான சிவராசா அனோஜன் என்பவருக்கு...