அடையாளம் தெரிந்தும் இலக்கு வைக்கப்பட்ட ஊடக வாகனம்: பெண் ஊடகவியலாளர் பாத்திமா படூனி படுகொலை!

Date:

தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ‘அல் மயாடீன்’ செய்தி நிறுவனத்தின் ஊடகவியலாளர் ஃபாத்திமா ஃபட்டூனி கொல்லப்பட்டார்.

தெற்கு லெபனானின் ஜெசின் மாவட்டத்தில் போர் நிலவரங்களைச் செய்தியாகச் சேகரித்துக் கொண்டிருந்தபோது, ஃபாத்திமா ஃபட்டூனி பயணித்த வாகனம் மீது இஸ்ரேலியப் படைகள் நேரடியாக ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளன.

அந்த வாகனம் ‘ஊடகம்’ எனத் தெளிவாக அடையாளப்படுத்தப்பட்டிருந்த நிலையிலும் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகச் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் கொடூரத் தாக்குதலில் பாத்திமா ஃபட்டூனியுடன் சேர்ந்து அவரது சகோதரரும் ஒளிப்பதிவாளருமான முகமது ஃபட்டூனி மற்றும் அல்-மனார் செய்தியாளர் அலி ஷோயப் ஆகியோரும் கொல்லப்பட்டனர்.

பாத்திமா படூனி ஹிஸ்புல்லா அமைப்பினருடன் தொடர்புடையவர் என இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. இருப்பினும், இதற்கான எந்தவொரு ஆதாரத்தையும் இஸ்ரேல் இதுவரை சமர்ப்பிக்கவில்லை.

லெபனான் அரசாங்கம் இச்சம்பவத்தைக் கடுமையாகக் கண்டித்துள்ளதுடன், இது சர்வதேச ஊடக விதிகளையும் ஜெனிவா உடன்படிக்கையையும் மீறிய “கொடூரமான குற்றம்” என அந்நாட்டு அதிபர் ஜோசப் அவன் தெரிவித்துள்ளார்.

பாத்திமா ஃபட்டூனியின் குடும்பத்தினர் ஏற்கனவே இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டிருந்த நிலையில், தற்போது அவரும் பலியாகியுள்ளார்.

இதன் மூலம் லெபனானில் இஸ்ரேலால் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.

Popular

More like this
Related

ஆரிகாமம் மஸ்ஜித் விவகாரம்: சமூக ஊடக வதந்திகளுக்கு பள்ளிவாசல் நிர்வாகம் அதிகாரப்பூர்வ தெளிவறிக்கை!

கடந்த 24.06.2026 முதல் சமூக ஊடகங்களில் ஆரிகாமம் மஸ்ஜித் தொடர்பாகப் பரப்பப்பட்டு...

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 66,064 ஆக அதிகரிப்பு

இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 66,064...

அங்காரா நேட்டோ உச்சிமாநாடு 2026: உலகளாவிய பாதுகாப்பு சவால்களுக்கு மத்தியில் முக்கிய முடிவுகள்!

உலகளாவிய அரசியல் மற்றும் பாதுகாப்புச் சூழலில் பெரும் நிச்சயமற்றத்தன்மை நிலவி வரும்...