IMF இன் 5, 6 ஆம் மீளாய்வுகள் அடுத்த வாரத்தில்

Date:

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டம் தொடர்ந்து முன்னோக்கி நகர்ந்து வரும் நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு, அதன் நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழான ஐந்தாவது மற்றும் ஆறாவது ஒருங்கிணைந்த மீளாய்வுகளை எதிர்வரும் புதன்கிழமை (27) பரிசீலிக்கவுள்ளது.

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுத் தலைவர் இவான் பாபஜியோர்ஜியோ (Evan Papageorgiou) தெரிவிக்கையில், கடந்த ஆண்டுகளில் இலங்கை ஸ்திரமான பொருளாதார நிலையை மீட்டெடுப்பதிலும், கையிருப்புகளை மீண்டும் கட்டியெழுப்புவதிலும், நம்பிக்கையை வலுப்படுத்துவதிலும் கணிசமான முன்னேற்றத்தை அடைந்துள்ளதாகக் கூறினார்.

இந்த முயற்சிகள் பொதுமக்கள், முதலீட்டாளர்கள் மற்றும் பங்குதாரர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், பொருளாதாரத்தை மிகவும் உறுதியான அடித்தளத்தில் நிலைநிறுத்த உதவியுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...