நாட்டின் பல பகுதிகளில் 30 – 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று

Date:

இன்று (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அநுராதபுரம், அம்பாந்தோட்டை மாவட்டங்களில் சில இடங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

சிலாபத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக அம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

Popular

More like this
Related

தேசிய பாதுகாப்பை மீள் உறுதி செய்தலில் நீதித்துறையின் வகிபாகம்.

நேற்றைய தொடர்ச்சி... பகுதி-02 குடும்பக் கட்டமைப்புகள் பல தலைமுறைகளைக் கொண்டதாகவும் சமூக அடிப்படையிலானதாகவும் இருந்தன. மத...

புனித மக்கா மாநகரில் இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் மகளின் திருமண ஒப்பந்தம் (நிக்காஹ்)!!

சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் ஓமர் லெப்பே அமீர் அஜ்வத் அவர்களின்...

அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 116 மேலதிக வாக்குகளால் தோல்வி!

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்காரவிற்கு எதிராக...